உலகம்

விக்கிமேற்கோள் இலிருந்து

உலகம் (World) எனப்படுவது அனைத்து மனித நாகரிகத்தையும் குறிப்பதாகும். குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகெங்கும் எனக் குறிப்பது புவியின் எப்பாகத்திலும் என்பதாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • நாம் வசிக்கும் இந்த உலகம் அழகானது. அருள் பெற்றது உயிருள்ளவரை இதை அனுபவிப்பதை இழந்துவிடுதல் பாவமாகும். --சேம்பர்ஸ்[1]
  • உலகை நம்பாதே. அது வாக்களிப்பதை ஒரு போதும் அளிப்பதில்லை. -அகஸ்டின்[1]
  • ‘உலகம்' என்பது ஒரு சங்கேதச் சொல். அதன் பொருள் அதிலுள்ள அயோக்கியத்தனம் அனைத்தும் - டிக்கென்ஸ்[1]
  • உலகில் நமக்குரிய ஒரே வேலி அதை நன்றாகத் தெரிந்து கொள்ளல். - லாக்[1]
  • உலகம் என்ற நாட்டைப்பற்றி விளக்கத்தைக்கொண்டு தெரிந்துகொள்ள முடியாது: ஒருவர் தாம் அதில் யாத்திரை செய்து பழகியே தெரிந்துகொள்ளல் வேண்டும். -செண்டர்ஃபீல்ட்[1]
  • சிந்தனை செய்பவர்களுக்கு உலகம் ஓர் இன்பியல் நாடகம். அதை உணர்பவர்களுக்குத் துன்பியல் நாடகம்,-ஹோரேஸ் வால்போல்[1]
  • உலகைப்பற்றிய அறிவு என்பதன் பொருள். மனிதர்களின் குறைபாடுகளை அறிதல் என்பதுதான். - டிக்கன்ஸ்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 127-128. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உலகம்&oldid=20482" இலிருந்து மீள்விக்கப்பட்டது