தாமோதர் தர்மானந்தா கோசாம்பி

விக்கிமேற்கோள் இலிருந்து
டி டி கோசாம்பி

டி. டி. கோசாம்பி எனப் பரவலாக அறியப்பட்ட தாமோதர் தர்மானந்தா கோசாம்பி (Damodar Dharmananda Kosambi, ஜூலை 31, 1907–ஜூன் 29, 1966) ஒரு இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர், புள்ளியியலாளர் மற்றும் பல்துறை அறிஞர். இந்திய மார்க்சிய வரலாறு எழுதுதலில் அடிப்படைகளை இட்டவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • பாரதநாட்டின் பழமையில் நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு ஏதும் புலப்படாவிட்டாலும் கூட, இப்புதிய அறிவுஜீவிகள் ஒரு புகழ்வாய்ந்த சரித்திரத்தைக் கடந்த காலத்திலிருந்து துருவித் துருவிக் கண்டுபிடித்தார்கள்.[1]
  • அறிவியல் என்பது அறிவியலின் வரலாறாகவும் இருக்கிறது.
  • கிராம தெய்வங்களில் மிகப் பெரும்பாலானவை இன்னமும் ஒரு சிவப்பு நாமத்தை அப்பியபடி உள்ளன. நீண்ட காலத்துக்கு முன்னமே மறைந்து போன மறைந்து போன ரத்த பலிகளை அப்படியே உணரவைக்கும் பதிலி அது.[2]
  • உணவு உற்பத்தியாளரின் தேவைக்கு மேல் கிடைக்கக் கூடிய உபரி உணவுப் பொருட்கள்தான் சம்பிரதாயமான எந்தப் பண்பாட்டிற்கும் அடிப்படையாகும்.[3]
  • இந்தியப் பண்பாட்டு சாதனைகளின் உச்சம் ஒவ்வொன்றும் ஆரியர்களுடையதாகவே இருக்க வேண்டும் என்ற தப்பெண்ணத்தின் அடிப்படையில் இன்னமும் சில ஆசிரியர்கள், சிந்து மக்கள் ஆரியர்களே என்று சாதிக்கின்றனர்.[4]
  • நிலைத்த உற்பத்தி கொண்ட சமுதாயத்தில் புரோகித வர்க்கத்தின் ஆதாயமே சடங்குகளின் உடனடி நோக்கம்.[5]
  • சுரண்டல் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ஒடுக்கும் கருவிக்கானத் தேவை இருக்கிறது.[6]
  • கீதையின் தலையான பன்பு யாருக்கும் எந்த விளக்கத்திற்கும் வளைந்து கொடுக்கும் அதன் முதுகெலும்பற்ற தன்மைதான்.[7]

இந்தியர்கள் பற்றி[தொகு]

  • இந்திய இனம் என்ற ஒரு பொது இனம் இல்லை. கருவிழியும் கருநிறமும் உள்ளவன் இந்தியனே; அது போலவே, நீலவிழியும் வெண்ணிறமும் உள்ளவனும் இந்தியனே. பொதுவாக தலைமயிர் எல்லோருக்கும் கருமையாக இருந்தாலும் இடையிடையே வேறு பல நிறங்களும் உண்டு.[8]
  • நாவின் சுவைக்காக இல்லாமல் மதத்தின் அடிப்படையில் இந்திய உணவுப் பழக்கங்கள் நிலவுகின்றன.[9]

மார்கிசியம் பற்றி[தொகு]

  • மார்க்சியம் சிந்தனைக்கு மாற்று அல்ல; அது பகுப்பாய்வுக்கானதொரு சாதனமே.[10]
  • மார்க்சியத்தை ஒரு தானியங்கி இயந்திரத்தின் உபயோகிப்புக் குறிப்புகளாகவோ அல்லது ஒரு பொன்மொழிகளின் கஜானாவாகவோ மாற்றிவிடக் கூடாது.[11]

மதம் பற்றி[தொகு]

  • தொழிலாளர் வர்க்கம் தம் உபரியை விட்டுக்கொடுக்க வேண்டும்; இல்லாவிட்டால் இயற்கையைக் கடந்த ஆற்றல்கள் மருமமான காரணிகள் மூலம் அவர்களை அழித்து விடும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படிச் செய்வதற்காக ஆளும் வர்க்கம் மதத்தைக் கையாள்கிறது.[12]

சமஸ்கிருதம் குறித்து[தொகு]

  • சமஸ்கிருத இலக்கியத்தின் வர்க்கச் சார்பு குறித்த எனது விமர்சனம் கடுமையானது.
  • பார்ப்பனர்கள் படைத்தவையோ, அவர்கள் வசத்தில் இருந்தவையோ அல்லது ஏதோ ஒரு விதத்தில் பார்ப்பனியம் என முத்திரை பெற்றவையோதான் சமஸ்கிருத இலக்கியத்தில் நீடித்து நிலைத்து நிற்பவையாய் உள்ளன.[13]

வரலாறு[தொகு]

வரலாறு[தொகு]

  • பொதுச்சமூகத்தில் பழங்குடிக் கூறுகள் இணைக்கப்படிருப்பதைத் தான் இந்திய வரலாற்றின் மொத்தப் போக்கும் காட்டுகிறது.[14]
  • வரலாற்றை மாற்றுவது அதனை எழுதுவதைக் காட்டிலும் முக்கியமானது.[15]

வரலாறு என்பது எது?[தொகு]

  • வரலாறானது உற்பத்திக் கருவியிலும் உற்பத்தி உறவுகளிலும் காலவரிசைப்படி அடுத்தடுத்து நிகழும் முன்னேற்றங்களின் முன்வைப்பாக வரையறுக்கப்படுகிறது.[16]
  • அடுத்தடுத்து வரும் ஆதிக்க வெறி தலைக்கேறிய பித்தர்களின் பெயர்களும், பெரும் போர்களுமே வரலாறு என்றால் அப்படிப்பட்ட இந்திய வரலாற்றை எழுதுவது கடினமாகும். ஒரு மன்னனின் பெயரை அறிவதைவிடவும் விவசாயம் செய்வதற்கு மக்களிடம் ஏர் இருந்ததா, இல்லையா என்பதே சரித்திரம் என்றால், அப்படிப்பட்ட சரித்திரம் இந்தியாவுக்கு உண்டு.[17]

இந்திய வரலாற்றை எழுதுதல்[தொகு]

  • இந்திய வரலாறு போன்ற சிக்கலான சங்கதியை எழுத முனைவர்கள் குறைந்தபட்ச பயிற்சியும் திறமையும் கைவரப் பெற்றிருக்க வேண்டும்; அதனைக் கொண்டு தரவுகள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் வரலாற்றை விவரிக்கவும் விளக்கவும் வேண்டும். முன்னரே முடிவு செய்து விட்ட தத்துவ, சித்தாந்த சட்டகத்திற்குள் அனைத்தையும் அடக்க முயலாதவர்களாகவும் இருக்க வேண்டும்.[18]

இந்திய வரலாற்றை எழுதுவதில் உள்ள சிக்கல்[தொகு]

  • பைபிள் ஒரு மதநூல்தான் என்றாலும் அதற்கு ஈடான எந்த இந்திய நூலைவிடவும் எவ்வளவோ அதிகமாக அந்நிகழ்விடத்தின் வரலாற்றியல், தொல் பொருளியல் மதிப்பை தன்னகத்தே கொண்டுள்ளது.[19]
  • இந்தியர்களில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லாரிடையிலும் வரலாற்று உணர்வானது குறிப்பிடத்தக்க அலவில் குறைவுபடுவது இந்தியச் சமுதாயத்துக்கும், இந்திய வரலாற்றுக்குமான தனிச்சிறப்பு.
  • புராணங்கள் கட்டுக்கதைகள் ஆகியவற்றைத் தவிர வேறு உயர்வான வரலாற்றுச் சான்றுகள் கிடையாது. முழுமையாக மன்னர்களின் பட்டியல் ஒன்றைக் கூடத் தயாரிக்க இயலாத நிலையில் உள்ளோம். சில சமயங்களில் முழு அரச வம்சங்கள் கூட நமக்குத் தெரியவில்லை. முகமதியர்கள் ஆட்சிக்காலம் வரையில் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பெரியோர் எவரைப் பற்றியும் உறுதியாகக் காலத்தைக் கூற முடியாது.[20]
  • மதம், மூடநம்பிக்கை, சடங்கு ஆகியவற்றை ஆராய்வதன் மேல் கவனம் குவிப்பது வரலாற்றில் இருந்து நம்மை வெகு தொலைவுக்கு விலக்கிச் சென்று விடும்.[21]
  • வேதங்கள் எடுத்துரைக்கும் புனைகதைகளிலிருந்து வரலாற்று உண்மைகளை பிரித்தெடுப்பது எப்போதுமே கடினமாகும்.[22]
  • வேதத்தில் உள்ள பதிவுகள் எதுவும் ஒரு காலவியலை வழங்குவதில்லை.
  • பழங்கதை பற்றிய ஆய்வும் சிக்கவிழ்ப்பும் எவ்வளவு கவர்ச்சியானதாக இருக்கலாமாயினும் அது நம் வரலாற்று குறிக்கோளில் இருந்து நம்மை மிகவும் தள்ளிக் கொண்டு சென்றுவிடுகிறது.[23]

டி.டி. கோசாம்பி பற்றிய பிறரது மேற்கோள்கள்[தொகு]

  • நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல; ஆனால் ஓர் அரசியல் செயற்பாட்டாளன் என்ற வகையில் எனது இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் கோசாம்பியையே பெரிதும் நாடினேன். ~ ஈ.எம்.எஸ்
  • ஆசான்களின் ஆசான் டி.டி.கோசாம்பி ~ ப.கு.இராஜன்

ரூமிலா தாப்பர்[தொகு]

  • டி டி கோசாம்பியின் சிந்தனைகள், ஆய்வு முடிவுகள், கருத்து உருவாக்கங்கள் எல்லாம் அறிவுத்தளத்தில் வைக்கப்பட்ட காலத்திலேயே மிகுந்த கவனத்தைப் பெற்றவை.
  • டி டி கோசாம்பி இந்திய வரலாற்று ஆய்வின் ஒரு புதிய பெரு நோக்கை உருவாக்கியவர்.

சான்றுகள்[தொகு]

  1. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 9
  2. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 34
  3. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 15
  4. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 129
  5. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 58
  6. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 107
  7. "ஆசான்களின் ஆசான் டிடி கோசாம்பியின் வாழ்வும் பிழிவும்" ப.கு.ராஜன், பக்கம் 59
  8. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 1
  9. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 2
  10. எஸ்.ஏ.டாங்கே எழுதிய இந்திய வரலாறு புத்தகம் குறித்த விமர்சனக் கட்டுரையில்
  11. Exasperating Essays எனும் கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில்
  12. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 106
  13. இந்திய வரலாறு ஓர் அறிமுகம், டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 159
  14. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 59
  15. "ஆசான்களின் ஆசான் டிடி கோசாம்பியின் வாழ்வும் பிழிவும்" ப.கு.ராஜன், பக்கம் 67
  16. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 25
  17. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 14
  18. "ஆசான்களின் ஆசான் டிடி கோசாம்பியின் வாழ்வும் பிழிவும்" ப.கு.ராஜன், பக்கம் 45
  19. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 29
  20. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 13
  21. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 35
  22. பண்டைய இந்தியா பண்பாடும் நாகரிகமும் , டி.டி.கோசாம்பி, NCBH பதிப்பகம், பக்கம் 141
  23. இந்திய வரலாறு ஓர் அறிமுகம் , டி.டி.கோசாம்பி, விடியல் பதிப்பகம், பக்கம் 146

புற இனைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது: