இயற்கை

விக்கிமேற்கோள் இலிருந்து

இயற்கை (nature) என்பது இயல்பாக இருக்கும் தோற்றப்பாடு என்னும் பொருள் கொண்டது. இயல்பாகத் தோன்றி மறையும் பொருட்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் ஆகியவை அனைத்தையும் இணைத்து இயற்கை என்கின்றோம்.

மேற்கோள்கள்[தொகு]

  • இயற்கையும் அறிவும் எப்பொழுதும் ஒரே விஷயத்தை கூறுகின்றன. - ஜுவினல்[1]
  • இயற்கையின் நிறைவுகள் அவள் இறைவனின் சாயை என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. குறைகள் அவள் அவருடைய வெறும் சாயைதான் என்பதைக் காட்டுவதற்காக அமைந்துள்ளன. -பாஸ்கல்[1]
  • முன்னேறுவதிலும், வளர்ச்சியிலும் இயற்கைக்கு ஓய்வே இல்லை. செயலின்மை அனைத்தையும் அவள் சபித்து விடுகிறாள். -கதே[1]
  • இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவளை ஆட்சி செய்ய முடியும். ~பேக்கன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 102-103. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இயற்கை&oldid=21629" இலிருந்து மீள்விக்கப்பட்டது